11/11/2009

அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளை கண்டித்து கொழும்பில் பேரணி




எந்த வகையான அழுத்தங்களோ, சவால்களோ ஜனாதிபதிக்கு எதிராக வரினும் அவற்றை தோற்கடிக்க ஜனாதிபதிக்கு பக்கபலமாக உழைக்கும் வர்க்கத்தினர் என்றும் துணை நிற்பார்கள். அதனை எடுத்துக் காட்டுவதற்காகவே இந்த மாபெரும் ஆர்ப்பாட்டபேரணி நடத்தப்ப டுகிறது என சிரேஷ்ட தொழிற் சங்கத் தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மெளலானா தெரிவித்தார்.

அரசுக்கும், ஜனாதிபதிக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்ச்சிகளையும் சதி முயற்சிகளையும் முறியடிக்கும் விதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர தொழிற்சங்க சம்மேளனம், மற்றும் அனைத்து அரசாங்க தொழிற்சங்கங்களும் இணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது.

அமைச்சர்களான மேர்வின் சில்வா, கீதாஞ்சன குணவர்தன, ஆளுநர் அலவி மெளலானா, ஏ. எச். எம். அஸ்வர் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு பேரணியை நடத்தினர். “ஜனாதிபதிக்கு எதிராக செய்யப்படும் சதி முயற்சிகளை முறியடிப்போம்”, “ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்து வோம்”, “நிறை வேற்று ஜனாதிபதி முறையே சிறந்தது”, “உழைக்கும் வர்க்க த்தினர் என்றும் ஜனாதிபதியின் பக்கமே” என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக கோஷமெழுப்பினர்.

நேற்று பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாலை 4 மணிவரை பேரணி நடைபெற்றது. (ள)

0 commentaires :

Post a Comment