11/24/2009
| 0 commentaires |
பலனற்ற அணுகுமுறைகளை கைவிட வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து தடம் மாறியுள்ளோருக்குத் தகு ந்த பாடம் புகட்டப்படும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அண் மையில் கூறியிருப்பது கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு தலைதூக்கியிருப்பதை வெளிப்படுத்து கின்றது. பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒரு கடுங்கோட்பாட்டாளர். புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் முழுமையான ஆதரவாளராகச் செயற்பட் டவர். தனிநாட்டு நிகழ்ச்சி நிரலிலிருந்து விடுபட்ட வர்களையே தடம் மாறியவர்கள் என்று இவர் குறிப்பிடுகின்றார் போல் தெரிகின்றது. எவ்வாறா யினும், கட்சிக்குள் தோன்றிய கருத்து வேறுபாடு களைக் கையாள்வது அவர்களின் உட்கட்சி விவ காரம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்தா பிக்கப்பட்ட நோக்கம் முற்றுமுழுதாக உட்கட்சி விவகாரமாகாது. கூட்டமைப்பு மாத்திரமன்றி எல்லாத் தமிழ்க் கட்சிகளும் இனப் பிரச்சினையை மையமாகக் கொண்டே ஸ்தாபிக்கப்பட்டனவென்பதால் அது தமிழ் மக்கள் சார்ந்த விடயம். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் மாத்திரமன்றி, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சங்கம மாகியிருப்பனவும் தனித்துவமாகச் செயற்படுவன வுமான முன்னாள் ஆயுதக் குழுக்கள் கூட இனப் பிரச்சினையின் தீர்வையே பிரதான நிகழ்ச்சி நிரலாகக் கொண்டிருந்தன. இக் கட்சிகளும் அமைப்புகளும் முன்வைத்த தீர்வுகள் வெவ்வேறானவையாக இருந்த போதிலும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே பிரதான நோக்கம். தந்திர இலங்கையின் அறுபது வருடத்துக்கு மேற்பட்ட வரலாற்றில் இனப்பிரச்சினையின் தீர்வுக்காகத் தமிழ்க் கட்சிகளும் அமைப்புகளும் மேற்கொண்ட முயற்சி கள் எவ்வித பலனையும் தரவில்லை. இந்திய வம் சாவளியினருக்குப் பிரசாவுரிமை மறுக்கப்பட்டமை தேசிய இனப்பிரச்சினையிலும் பார்க்கப் பாரதூ ரமானது. இந்திய வம்சாவளியினரின் பிரசாவுரிமைப் பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டிக்கும் பின்னணி யில் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாதிரு ப்பதைப் பார்க்கும் போது தமிழ்த் தலைவர்களின் தவறான அணுகுமுறையே இந்த நிலைமைக்குக் காரணம் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இரண்டு விதமான அணுகுமுறைகளைத் தவறானவை எனக் கூறலாம். ஒன்று ஆயுதப் போராட்டம் மூலம் தனிநாடு அமைக்க முடியும் என்ற அணுகுமுறை. மற்றது முழுமையான அரசியல் தீர்வைத் தவிர வேறு எதையும் ஏற்க முடியாது என்ற அணுகுமுறை. வெவ் வேறான சந்தர்ப்பங்களில் இவ்விரு அணுகுமுறை களும் பின்பற்றப்பட்டிருக்கின்றன. இவற்றினால் இனப்பிரச்சினை சிக்கலாகியதும் தமிழ் மக்கள் மோசமான பாதிப்புக்களுக்கு உள்ளாகியதுமே கண்ட பலன். எனவே இனப்பிரச்சினையின் தீர்வில் அக் கறையுள்ள கட்சிகளும் அமைப்புக்களும் தங்கள் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. தவறான அணுகுமுறைகளையே தொடர்ந்து பின்பற்றுவது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகமாகிவிடும். அது அழிவுகளு க்கும் அவலங்களுக்கும் உள்ளாகியிருக்கும் மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகிவிடும். மக்களை மோசமான பாதிப்புகளுக்கு உட்படுத்தாமல் அரசியல் தீர்வை அடையும் அணுகுமுறையே இன்றைய தேவை. சமகாலத்தில் நடைமுறைச் சாத்தி யமான தீர்வை ஏற்றுக்கொண்டு முழுமையான அரசி யல் தீர்வுக்கான முயற்சியை முன்னெடுப்பதே புத்திசாலித்தனமானதும் மக்களின் நலன் சார்ந்ததுமாகும்.
0 commentaires :
Post a Comment