11/14/2009

ஜெனரல் சரத் பொன்சேகா பதவி விலகலை இலங்கை அரசு ஏற்றது

இலங்கை கூட்டுப்படைத் தளபதி பதவியில் இருந்து இம்மாத முடிவில் விலகுவதாக ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் வழங்கிய கடிதத்தை அரசு ஏற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார

பொன்சேகா அவர்கள் உடனடியாக பணியில் இருந்து விலகிச் செல்லலாம் என்று அரசின் அதிகார பூர்வ இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றார். மேலும் தான் இம்மாத இறுதியில்தான் பதவி விலகச் செல்ல விரும்புவதாகவும் அதற்கு முன்பாகவே தான் பதவியில் இருந்து அனுப்பபட்டால் அது கட்டாய ஒய்வாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே வேளை தான் பதவி விலகுவதற்கான 16 காரணங்களை ஜனாதிபதியிடம் பதவி விலகல் கடிதத்துடன் ஜெனரல் பொன்சேகா அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த கடிதம் குறித்து அதிகார பூர்வமாக கருத்து தெரிவிக்க ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்துவிட்டார்.




0 commentaires :

Post a Comment