11/06/2009

சூடானில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் இழுபறியில்




சூடானின் தென் பகுதியை சுதந்திர தேசமாகப் பிரகனம் செய்ய வேண்டுமென அந்நாட்டின் வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்டார்.

சூடானின் வட பகுதியில் இடம் பெறும் யுத்தம் ஐக்கிய அரசாங்கம் அமைவதற்கான நல்ல சந்தர்ப்பங்களை தூரமாக்கிச் செல்கின்றது. இது தென் பகுதி, வடபகுதி அரசியல் தலைவர்களிடையே புரிந்துணர்வை வளர்ப்பதில் பெரும் தடையாக உள்ளதென்றும் சூடான் வெளிநாட்டமைச்சர் குற்றம் சாட்டினார்.

சூடானின் வட பகுதி (டர்புர்) அதிகள வான முஸ்லிம்களைக் கொண்டுள்ளதுடன் கிறிஸ்தவர்கள் மற்றும் பழங்குடி அரபி இனத்தவரையும் கொண்டுள்ளது. சுமார் இருபது வருடங்கள் சூடானின் தென்பகுதி அரசுடன் வட பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இரண்டு தேசங்களிலுமுள்ள மக்களையும், அரசியல் தலைவர்களையும் இணைத்து சூடானிய ஐக்கிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் 2005 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. 2011 இல் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி தென் பிராந்திய மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கிணங்க நடந்து கொள்வதென்றும் தீர்மானிக்கப் பட்டது.

சூடான் வெளிநாட்டமைச்சரின் இந்த அறிக்கை வட, தென் பிராந்தியத் தலைவர்களுக்கிடையிலான விரிசல்கள் வளர்ந்துள்ளதைக் காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


0 commentaires :

Post a Comment