11/22/2009

இலங்கை வரலாறு படைக்கிறது

இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் செயற் பாடு அரசியல் அரங்கில் அதிகம் பேசப்படும் விட யமாக இன்றுவரை இருக்கின்றது. அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்தில் எதிரணிக் கட்சிகள் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிப்பதை அண்மைக் காலமாக அவதானிக்க முடிகின்றது. இடம் பெயர்ந்தவர் களை இப்போதைக்கு மீளக் குடியமர்த்தக் கூடாது என்று சில மாதங்களுக்கு முன் கூறிய ஒரு பிரமுகர் இப்போது எதிரணி அரசியலில் சங்கமிக்கத் தொடங்கியதும் மீள்குடி யேற்றம் திருப்திகரமான முறையில் நடைபெறவில்லை என்று அரசாங்கத்தின் மீது கணை தொடுத்த வேடிக்கையையும் அண்மையில் பார்த்தோம். நாய்கள் எவ்வளவுதான் குரைத்தாலும் ஊர்தி நகரும் என்பது போல, எதிரணியினர் அரசியல் நோக்கத்துடன் செய்யும் பிரசாரங்களுக்கு மத்தியில் அரசாங்கம் தனது பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்றியது. இடம்பெயர்ந்த மக்க ளுக்கு நல்வாழ்வை அளிக்க வேண்டியது தனது பொறுப்பு என்று ஜனாதிபதி கூறியதை நடைமுறைப்படுத்தும் விதத் தில் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. நிவாரணக் கிராமங் களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இடம்பெயர் ந்த மக்களின் மீள்குடியேற்றம் மிகத் துரிதமாக நடைபெறு கின்றது. நிவாரணக் கிராமங்களிலுள்ள வசதிகள் பற்றியும் மீள் குடியேற்றம் பற்றியும் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தடவை அப்பகுதிகளுக்குச் சென்று வந்தபின் திருப்தி தெரிவித்தது மாத்திரமன்றி அரசாங்கத்து க்கு நன்றியும் தெரிவித்தார்கள். அந்த அளவுக்கு அர சாங்கம் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறை வேற்றி வருகின்றது. ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினரும் வட க்கு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பானவரு மான பசில் ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட அறிவித்தல் இடம்பெயர்ந்த மக்களை நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தி யிருக்கும். இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான பல்வேறு விடயங்களையிட்டு அவர் முக்கியமான அறிவித்தலைச் செய்திருக்கின்றார். நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களின் நடமாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் சொந்த வீடுகளில் வசிப்பவர்கள் போல எந்த நேரத்திலும் எங்கும் சென்று வரலாம். இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் ஜனவரி 31ந் திகதிக்கு முன் அவர் களின் சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டுவிடுவர். அது வரையில் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள் வழமை போல எல்லா வசதிகளையும் பெறுவர். மீளக் குடி யேற்றப்பட்டவர்களுக்கு இதுவரை வழங்கிய இருபத்தை யாயிரம் ரூபா கொடுப்பனவு ஐம்பதாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட கூரைத்தகடு போன்ற பொருட்களும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. உலகின் பல நாடுகளில் மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். ஆபிரிக்க நாடுகளில் உள்நாட்டு மோதல்கள் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்படும் அளவு துரிதமாக வேறெந்த நாட்டிலும் மீள் குடியேற்றம் இடம் பெறவில்லை. இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்குக் கிடைக்கும் வசதிகள் மற்றும் கொடுப்பனவுகள் போல வேறெந்த நாட்டிலும் இல்லை. இடம்பெயர்ந்தோருக்கான வசதிகள் மற்றும் மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் இலங்கை வரலாறு படைத்திருக்கின்றது.


0 commentaires :

Post a Comment