11/25/2009

கிழக்கு மாகாணம் எதிர்வரும் ஆண்டில் ஒரு சுபீற்சமான மாகாணமாக திகழ்வதற்கு கிழக்கு மாகாண சபை தனது முழு அதிகாரத்தையும் பிரயோகிக்கும்- முதலமைச்சர்


2010ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தின் 2ம் குழு நிலை img_2112விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முதலமைச்சர் செயலகம் மற்றும் தனது அமைச்சுக்கான கிராமிய அபிவிருத்தி சுற்றுலா மீள்குடியேற்றம் உள்ளுராட்சி போன்ற அமைச்சுக்கள் தொடர்பான வரவு செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் கிழக்கு மாகாண சபையின் வரவு செலவு திட்டத்தில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு ஓரளவு முன்னேற்றம் காணப்படுகின்றது. அத்தோடு கிழக்கு மாகாணம் குறிப்பிட்ட சில துறைகளில் பாரிய வளர்ச்சியையும் கண்டிருக்கின்றது. குறிப்பாக விவசாயம் மீன்பிடி கிராமிய அபிவிருத்தி, உல்லாசத்துறை போன்றவற்றில் குறிப்பிட்டளவு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இதேபோல் எதிர்வருகின்ற ஆண்டில் கிழக்கு மாகாணம் ஓர் தன்னிறைவான மாகாணமாகத் திகழ்வதோடு ஓர் சுபிட்சமான மாகாணமாகவும் உருவாவதற்கு கிழக்கு மாகாண சபை தனது முழு அதிகாரங்களையும் பிரயோகிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து குறிப்பிடுகையில்
அதிகாரப்பகிர்வுகள் தொடர்பில் ஒரு சில முரண்பாடுகள் காணப்பட்டாலும் எதிர்வருகின்ற காலங்களில் எமது மாகாணம் முழுமையான ஓர் ஆளுமை மிக்க மாகாணமாக மாறுவதற்கு துறைசார் அபிவிருத்தியில் மக்கள் பிரதிநிதிகள் அனைவருமே ஒருமித்த சிந்தனையோடு செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். முதலமைச்சர் செயலகம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.



0 commentaires :

Post a Comment