11/22/2009

புரவலர் புத்தகப் பு+ங்காவின் பணிக்கு தமிழ் இலக்கிய உலகு கடமைப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியப் பரப்பில் புரவலர் புத்தக பூங்கா ஆற்றிவரும் பணி மகத்தானது. சுமார் இரண்டு வருடமங்களில் இருபது இலக்கிய மலர்களை மலரச் செய்வது என்பது பிரமிப்பை தருகின்றது. ஆக்கக் திறன் கொண்ட படைப்பாளி தனது படைப்பை நூலுருவில் காணும் போது அடையும் பேரானந்தத்தை கண்டு புரவலர் ஹாசிம் உமர் உவகை கொள்கிறார். அவருக்கு தமிழ் இலக்கிய உலகு என்றும் கடமைப்பட்டுள்ளது” இவ்வாறு தென்கி ழக்கு பல்கலைக்கழக மொழித்துறை நிபுணத்துவ ஆலோசகர் பேராசிரியர் அ. சண்முகதாஸ், புரவலர் புத்தகப் பூங்காவின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவும் நான்கு புதிய நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையில் தெரிவித்தார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த 11ம் திகதி நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர்; “நூல்களை வெளியிடுவது நல்லதொரு விடயம் அதுவும் மற்றையவர்களின் நூல்களை வெளியிடுவது மிகச் சிறந்த விடயம். புரவலரின் கொடை மிகவும் வித்தியாசமானது. தமிழ் இலக்கிய உலகிற்கு புதிய வரவுகளை வெளிக்கொணருவதுடன், எழுதி பல வருடங்களாக பெட்டியில் பூட்டி வைத்திருப்பவர்களின் ஆக்கங்களை தேடிப் பிடித்து வெளிக்கொண்டு வருவதனை பாராட்டாமல் இருக்க முடியாது.

நூலாசிரியர் திருமதி பவானி தேவதாசுக்கு புரவலர் ஹாசிம் உமர் நூல்கள் வழங்குவதையும் பேராசிரியர் சண்முகதாஸ், ஆர். ராஜலிங்கம், திருமதி ஞானம் ஆகியோரையும் படத்தில் காணலாம்.


நூலாசிரியர்கள் திருமதி பவானி தேவதாஸ், மு. சடாட்சரன், மருதநிலா நியாஸ், ஜோ ஜெஸ்டின் ஆகியோர்

0 commentaires :

Post a Comment