இலங்கையின் வடக்கே வவுனியாப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் மக்களை சந்திக்கும் முகமாக எதிர்கட்சியின் உறுப்பினர்கள் உட்பட மீள்குடியேற்ற அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள 32 பேர் அங்கு செலவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
அந்தக் குழுவில் வன்னிப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நாடாளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறுகிறார். அவர்கள் எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை அங்கு செல்லவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறுகிறார்.
0 commentaires :
Post a Comment