மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிரதேசத்தில் அவுஸ்திரேலிய மக்களின் சுமார் ஒருகோடி ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட சமூக மண்டபம் மற்றும் விவசாயப் பண்ணை என்பன மக்களிடம் கையளிக்கும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் இதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். உலக தரிசன நிறுவனத்தின் அபிவிருத்தி முகாமையாளர் கிறிஸ்டி அன்ரனி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் செயல்திட்டப் பணிப்பாளர் ஸ்கொட் லவ்ட், வலயப் பணிப்பாளர் எஸ். சுதர்ஷன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சற்றலைட் நிலையம் வள மையம் ‘நூலகம், தொழில்நுட்ப அலுவலகம், பெண்கள் மற்றும் ஆண்கள் விடுதிகள் என்பனவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
0 commentaires :
Post a Comment