11/13/2009

தேசிய போசாக்கு கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி


தேசிய போசாக்கு கொள்கையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சுகாதார போசாக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி வாழ்க்கை வட்டம் முழுவதும் சிறந்த போஷாக்கு மட் டம் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தேசிய கொள்கை அமுல்படுத்தப்பட உள்ளது.

ஒவ் வொரு வயது மட்டத்திற்கும் ஏற்ற வாறு போசாக்கு திட்டங்கள் வகுக் கப்பட உள்ளதோடு கர்ப்பிணிப் பெண்கள், போசாக்கு இன்மைக்கு உள்ளாகியுள்ளோர் குறித்தும் இந்த தேசிய போஷாக்குக் கொள்கையினூ டாக சிறந்த போசாக்கு வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகா தார அமைச்சு கூறியுள்ளது.

0 commentaires :

Post a Comment