மலையகப் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சுகாதார வசதியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் வருமானம் குறைந்த ஐயாயிரம் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் ஐந்து கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்தில் 2000 குடும்பங்களுக்கும், சப்ரகமுவ மாகாணத்தில் 1500 குடும்பங்களுக்கும், ஊவா மாகாணத்தில் 1500 குடும்பங்களுக்கும் இவ்வருட முடிவுக்குள் கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். மலையகப் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சுகாதார வசதியை மேம் படுத்தும் திட்டத்தின் கீழ் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கழிப் பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்ச ரவையின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதற்கேற்ப இவ்வருடம் ஐயாயிரம் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவென அரசாங்கம் ஐந்து கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. இந்நிதி ஒரு குடும்பத்துக்கு பத்தாயிரம் ரூபா வீதம் விநியோகிக்கப்படுவதாகவும் அதனைக் கொண்டு அக்குடும்பங்களே கழிப்பறைகளை கட்டிக்கொள்ள வேண்டுமென்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ் அடுத்த வருடமும் வருமானம் குறைந்த மேலும் ஐயாயிரம் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். |
11/10/2009
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment