11/08/2009

இலங்கை, இந்திய மலேசிய அறிஞர்கள் பங்கேற்ற பன்னாட்டு ஆய்வியல் மாநாடு

தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித் துறையின் ஏற்பாட்டில் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் வரலாற்றில் முதன் முறையாக இலங்கை, இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆய்வியல் அறிஞர்களையும், ஆய்வாளர்களையும், பேராளர்களையும் ஒன்றிணைத்த ‘தமிழ் பேசும் முஸ்லிம்களின் மொழி, பண்பாடு, சமூகப் பிரச்சினைகள்’ எனும் கருப்பொருளினாலான பன்னாட்டு ஆய்வியல் மாநாடு அண்மையில் நடைபெற்றது.
அமர்வுகள் முடிந்ததும், மாநாட்டின் சிறப்பம்சமாக கிழக்கிலங்கை மக்களின் கலை, கலாசாரப், பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் ‘கதை இரவு’ இடம்பெற்றது.

பல்கலைக்கழக ஆற்றங்கரை முன்றில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வளாகத்தின் பழைய மாணவன் ஏ. எல். எம். ஷினாஸின் அறிவிப்பில் மேடை களை கட்டியது. பிறவியிலேயே கண் பார்வை தெரியாத இறக்காமம் மீரா உம்மாவின் தாலாட்டும், திருமணப் பாடலும், காதல் பாட்டும் சபையோரை மெய்சிலிர்க்க வைத்தது. கைதட்டல்கள் ஆற்றங் கரையை உசுப்பின.



0 commentaires :

Post a Comment