யாழ். குடாநாட்டின் மேற்குக் கரையோரப் பகுதி கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குருநகர் கடற்தொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது இழுவைப்படகு கடற்தொழிலாளர்கள் மற்றும் சிறு படகுகளில் தொழிலில் ஈடுபடும் கடற்தொழிலாளர்களுக்கிடையே தத்தமது தொழில்களைத் தொடர்வதில் கடந்த இரு மாத காலமாக நிலவி வந்த இழுபறிக்கு தீர்வு காணக்கூடிய சுமுகமான சூழ்நிலையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்படுத்தியுள்ள நிலையில் குருநகர் கடற்தொழிலாளர் சங்கம் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. இச் சந்திப்பின் போது கடற்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில் தமது கடற்தொழிலில் அதிக சிரத்தையெடுத்து இரு தரப்பினருக்குமிடையே சந்திப்பை ஏற்படுத்தி கடற்தொழிலை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழியமைத்துத் தந்தமைக்காக கடற்தொழிலாளர்களின் சார்பில் அமைச்சருக்கு தமது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டனர். இதயடுத்து கடற்தொழிலை எதிர்காலத்தில் திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான முன்னேற்பாடுகள், ஒழுங்குகள் தொடர்பாக அமைச்சரிடம் கடற்தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் தமது ஆலோசனைகளை முன்வைத்தனர். அவற்றில் தற்போது நடைமுறையில் இருக்கும் அதிகாலை 4 மணிக்கு தொழிலுக்குச் செல்வதற்கான நேரத்தை அதிகாலை 3 மணிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல், ஒரு நாள் கடலில் தங்கிநின்று தொழில் செய்வதற்கான 28 அடி நீளப் படகினை தயாரித்தல் கடற்கரையில் மக்களின் பாவனைக்கு அனுமதிக்காத வீடுகளை குடியிருப்பதற்காக அனுமதித்தல் போன்ற 11 கோரிக்கைகள் அடங்குகின்றன. குருநகர் கடற் தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகவும் அவற்றை நிறைவேற்றுவதற்கு கடற்தொழிலாளர்கள் அனைவரும் தமக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக் கலந்துரையாடலின் போது கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 commentaires :
Post a Comment