கல்குடா வலயத்தின் மட்/வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற செவ்வாழை சஞ்சிகை வெளியீட்டில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாடசாலை அதிபர் கே.தவராஜா தலைமையில் நடைபெற்ற மேற்படி சஞ்சிகை வெளியீட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாணவர்கள் அனைவருக்கும் நேர முகாமைத்துவம் மிகவும் முக்கியமான ஒன்றாகும் பாடசாலைக் காலங்களில் இருந்து நேர முகாமைத்துவத்தினை உணர்ந்து செயற்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் தொழில்வாய்ப்புக்கள் பெற்று தொழிலாற்றுகின்ற இடங்களிலும் நேர முகாமைத்துவத்தின் பங்கு பாரியளவில் செல்வாக்கு செலத்தும். பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் அனைவருமே எதிர்காலத்தில் சுவீற்சமிக்க எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புக்குரியவர்கள் பாடசாலைப் பருவத்தில் நாம் பழகுகின்ற ஒழுக்க விழுமியங்கள் எமது எதிர்கால வாழ்விற்கு வழிகோலாக அமைகின்றது என குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் எமது மாணவ சமுதாயம் பல்வேறு இடர்களை சந்தித்து இருக்கின்றது. ஆனால் இன்று நாட்டின் எப்பகுதியிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மாணவர்கள் எதுவித தங்கு தடைகளுமின்றி தாங்கள் விரும்பிய வழியில் கல்வி கற்பதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. பாடசாலையில் கல்வி பயில்கின்றபோது பரீட்சையில் சித்தியடைவது மட்டும் எமது இலக்கல்ல, அதனோடு இணைந்து இணைப்பாடவிதானங்கள் எனக் குறிப்பிடப்படுகின்ற விளையாட்டு, கவிதை. கட்டுரை, நாடகம், சிறுகதை, தலைமைத்துவப்பயிற்சி விவாதங்கள் போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும், பாடசாலையைப் பொறுத்தவரையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோரகள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள் என ஓர் குடும்பம்போல் செயற்படுகின்றது. இதில் கற்பிக்கின்ற ஆசிரியர்களின் செயற்பாடானது ஒவ்வொரு மாணவனையும் பரீட்சைக்கு தயார்படுத்துவதோடு அவர்கள் தமது சொந்த வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களையும் சமுகத்தில் மதிக்கப்படுபவர்களாகவும் மாற்றப்படவேண்டிய பாரிய பொறுப்பு உடையவர்களாக விளங்குகின்றார்கள். பாடசாலை கல்வி தவிர்ந்த ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதற்கு ஆசிரியர்களே வழிகாட்டியாக இருக்கவேண்டும். இவ்வாறு இருக்கின்ற பட்சத்திலேயே ஒவ்வொரு மாணவனினதும் இயல்பான ஆக்கப்படைப்புக்களை வெளிக் கொணர முடியும். இவ்வாறான ஆக்கப்படைப்புக்களின் தொகுப்புக்களே சஞ்சிகையாக ஒவ்வொரு பாடசாலையிலும் வருடாந்தம் வெளியிடப்படவேண்டும். இதனூடாக மாணவர்களது தனிப்பட்ட திறமை வெளிக்கொணரப்படுகின்றது. இவ்வாறான ஓர் வெளிப்படாகவே இன்று இந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் செவ்வாழை சஞ்சிகையாகும். இச் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் குறிப்பிட்டார். இவ்விழாவில் மாணவர்களின் வரவேற்பு நடனம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், எனப்பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது, இச்சஞ்சிகை வெளியீட்டு விழாவில் கௌரவ அதிதியாக கல்குடா வலையக் கல்விப்பணிப்பாளர் திரமதி சுபாஸ் சக்கரவர்த்தி அவர்களும் விசேட அதிதிகளாக கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு எஸ் .தங்கராஜா, உதவிக்கல்விப்பணிப்பாளர் ஞானராஜா, கோரளைப்பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளர் சின்னத்தம்பி அவர்களும் பாடசாலை அதிபர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வின்போது முதலமைச்சர் 5ம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
0 commentaires :
Post a Comment