11/28/2009

தமிழ் பேசும் மக்கள் சரியான தருணத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும் - அஷாத் மௌலானா.


லங்கையின் இன்றைய முக்கியத்துவம் மிக்க அரசியல் சூழ்நிலை தமிழ் பேசும் மக்கள் சரியான தருணத்தில் சரியானதொரு முடிவை மேற்கொள்வதே அவர்களின் அரசியல் உரிமையினையும் அபிவிருத்தியினையும் பெற்றுக்கொள்வதற்கான யுத்தியாகும் என த.ம.வி.பு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான அஷாத் மௌலானா தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நிலையானதொரு உரிமைப் போராட்டம் உரிய இலக்கை இதவரை எய்தமைக்கு தமிழ் அரசியல் தலைமைகளும் ஆயுதத் தலைமைகளும் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க தவறியும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளுமே காரணம் ஆகும். இன்றைய இலங்கையின் அரசியல் சூழ்நிலையின் யயதார்த்தம் உணர்ந்து தமது அரசியல் சக்தியினை சரியான முறையில் பயன்படுத்தவதே தற்போது உள்ள ஒரே வழியாகும். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறையில் சிறுபான்மை மக்கள் தமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. எனவே தமது வாக்குப் பலத்தை தமது உரிமைகளும் அபிவிருத்தியையும் வென்றெடுப்பதற்கான சரியான ஒரு தலைமையின் பின்னால் முதலீடு செய்வதே தற்போது உள்ள ஒரே வழியாக உள்ளது. இது விடயத்தில் த.ம.வி.பு கட்சி சரியான தருணத்தில் சரியான முடிவை மேற்கொண்டு தமது மக்களின் அரசியல் உரிமை பிரச்சினையிலும் அபிவிருத்தி விடயத்திலும் தூர நோக்கான தீர்க்கதரிசனம் உள்ள பாதையில் பயணிக்க தயாராகியுள்ளது என மேலும் தெரிவித்தார்.




0 commentaires :

Post a Comment