11/11/2009
| 0 commentaires |
ஒபாமாவின் சுகாதார நலத்திட்டத்திற்கு சனப்பிரதிநிதிகள் சபை அங்கீகாரம்
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சுகாதார நலச் சட்டமூலத்தை அந்நாட்டின் சனப் பிரதிநிதிகள் சபை அங்கீகரித்துள்ளது.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இச் சட்டமூலம் 220 215 என்ற மிகக் குறைந்தளவிலான வாக்குவித்தியாசத்தில் சனப்பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச்சட்டமூலம் தற்போது செனட்டின் பிறிதொரு சட்டவரைபுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
இச்சட்டமூலம் சிறந்த காப்புறுதிச்சேவையை வழங்குவதற்காக தனியார் கம்பனிகளுடன் போட்டியிடக் கூடிய வகையில் காப்புறுதிகளை வழங்குவதற்கு அரசுக்கு அனுமதி வழங்கியுள்ள அதேவேளை, காப்புறுதி திட்டத்திற்குள் மேலும் 36 மில்லியன் மக்களை உளளீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
ஒபாமா தனது உள்நாட்டு நிகழ்ச்சி நிரலுக்கான கொள்கையில் சுகாதார நலத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment