11/27/2009

கிழக்கு ஆங்கில மொழி தின போட்டிகள் டிசம்பரில்


கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றும் மாகாண மட்டத்திலான ஆங்கில மொழித்தின போட்டி நிகழ்ச்சிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 07 ஆம் 08 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன.

இம்முறை இப்போட்டி நிகழ்ச்சிகளை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆங்கில எழுத்தாக்கம் மற்றும் கவிதைப் போட்டிகள் 07 ஆம் திகதியும், பேச்சு மற்றும் நாடகப் போட்டிகள் 08 ஆம் திகதியும் நடத்தப்படவுள்ளன.

ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள மாவட்ட மட்டத்திலான ஆங்கில மொழி போட்டிகளில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மாகாண ரீதியிலான போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.

0 commentaires :

Post a Comment