11/26/2009

இன்று ஈதுல் அல்ஹா ஹச்சுப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்களை உரைப்பதில் பேரானந்தம் அடைகின்றேன்.


முஸ்லிம் சகோதரர்களின் வரலாற்றில் இப்பண்டிகைக்கு முக்கியமான இடமுண்டு, இதனை தியாகத்திருநாள் என்றும் அவர்கள் விழிப்பதுண்டு, இறைவனுக்காகவேண்டி அனைத்தையுமே தியாகம் செய்யும் உண்மையான மனப்பக்குவத்தினையும் இப்பண்டிகை வலியுறுத்தி நிற்கின்றது. ஒரு மனிதன் தன்னுள் புதைந்து கிடக்கும் கெட்ட வேண்டாத விடயங்களை விட்டொழித்து தூய்மையான பாதையில் பயணிப்பதையே இது வலியுறுத்துகின்றது. எமது நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இவ்வாறான தத்தவங்களும் வழிகாட்டுதல்களும் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. பிற சமூகங்களை மதித்து தனக்குள்ள உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உள்ளம் எமது நாட்டில் அதிகம் அதிகம் தேவைப்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் யுத்தம் ஓய்ந்துள்ள நிலையில் எமது நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காகவும், பல விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டி உள்ளது. தியாகத்தை நினைவுபடுத்தி அதனை வலியுறுத்தும் புனிதமான இத்தினத்தில் அனைத்து மனித உள்ளங்களிலும் மனிதம் மலர்ந்து பிறரின் உரிமைகளையும் கௌரவத்தினையும் பாதுகாக்கும் மனோபக்குவமும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் வலுப்பெற எனது ஆசிகள் உண்டாகட்டும்.


0 commentaires :

Post a Comment