11/02/2009
| 0 commentaires |
சந்திவெளி சித்தி விநாயகர் ஆலயத்தின் ராஜகோபுர புணர்வுத்தாரணத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் சீமேந்து மூட்டைகள் வழங்கிவைப்பு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தற்போது மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனூடாக ஒவ்வொரு கிராமங்களிலும் தமது அரசியல் முன்னெடுப்பிற்கான குழுக்களை நியமித்து, அவர்களினூடாக குறித்த கிராமங்களுக்கு அபிவிருத்திப் பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் ஓர் கட்டமாக இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது 400 சீமெந்து மூட்டைகளை வழங்கி வைத்தது. சந்தி வெளிப் பிரதேச மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களைச் சந்தித்து மேற்படி ஆலயத்தின் இராஜ கோபுரம் அமைப்பது தொடர்பாகவும் அப் பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடினர். இதன் பயனாகவே முதற்கட்டமாக இன்று ஆலயத்தின் இராஜ கோபுரப் புன்வுத்தாரணத்திற்காக சீமேந்து மூட்டைகள் வழங்கிவைக்கப்பட்டன. அச் சீமெந்து மூட்டைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா உத்தியோக பூர்வமாக கையளித்தார். இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்டக் குழுவினர்களும், மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கோறளைப் பற்று தவிசாளர் உதயஜீவதாஸ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் சிவகுணம் உட்பட பலர் கலந்து கொண்;டார்கள்
0 commentaires :
Post a Comment