கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு மத்திய கால் நடை அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கால்நடை அபிவிருத்தி தொடர்பான கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானோர் பார்வையிட்டனர்.
இம்மாவட்டத்தில் கால் டை அபிவிருத்தியில் முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வை மையப்படுத்தி மட்டக்களப்பு இந்து கல்லூரி மண்டபத்திலும் மைதானத்திலும் நடைபெற்ற இக்கண்காட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேத்சதுரை சந்திரகாந்தன் திறந்து வைத்தார்.
மாகாண கால்நடை அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் ,பிரதம செயலாளர் மு.பொ.பாலசிங்கம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இக்கண்காட்சியில் கால் நடைகளுடன் பல்வேறு வகையான கால் டை உற்பத்திப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு அது பற்றிய விளக்கமும் அளிக்கப்பட்டது
0 commentaires :
Post a Comment