11/22/2009

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நிவாரணக் கிராமசெயற்பாட்டையிட்டு திருப்தி அடைவதாக கூறியதும்ரணில் விக்கிரமசிங்ஹ பதற்ற ம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நிவாரணக் கிராமங்களுக்கும் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் சென்றதும் அரசாங்கத்தின் செயற்பாட்டையிட்டு திருப்தி அடைவதாக அவர்கள் கூறியதும் பழைய செய்திகள். ஆனால் இந்தப் பழைய செய்தியால் ரணில் விக்கிரமசிங்ஹ பதற்றமடைந்தி ருப்பது புதிய செய்தி. சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக ரணில் ஏற்கனவே வலை விரிக்கத் தொடங்கிவிட்டார். தமிழ் மக்களின் வாக்குகளில் ரணிலுக்கு எப்போதுமே ஒரு கண். தமிழ் மக்களின் நண்பனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள அவர் தவறமாட்டார். உண்மையான நண்பன் என்றால் வேஷங்கள் போடத் தேவையில்லை. ஆனால் ரணில் வேஷம் போட்டுத்தான் ஆகவேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ரணில் முன்வைத்த நிபந்தனைகள் அவர் போடுகின்ற வேஷத்தின் ஒரு பகுதி. பொது வேட்பாளரை ஏற்றுக் கொள்வதற்காக அவர் முன்வைத்த நிபந்தனைகளுள் இரண்டு தமிழ் மக்கள் தொடர்பானவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் பொது வேட்பாளர் கொண்டுள்ள நிலைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உடன்பாடானதாக இருக்க வேண்டும் என்பது மற்றைய நிபந்தனை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்திருக்கின்றது என்ற அபிப்பிராயத்தை மக்களிடம் தோற்றுவிக்கும் நோக்கத்துடனேயே இந்த நிபந்தனைகளை ரணில் முன்வைத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் மக்கள் தனக்குச் சாதகமாக முடிவு எடுப்பதற்கு இந்த நிபந்தனைகள் போதும் என்று அவர் நினைத்திருக்கின்றார். பொது வேட்பாளரின் நிலைப்பாடு கூட்டமைப்புக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை போடுபவர் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. இவருக்கு எந்த நிலைப்பாடும் இல்லை என்பது தான் உண்மை. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இனப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கும் என்பது பற்றி ரணில் இன்று வரை கூறவில்லை. உண்மையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியிடம் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான திட்டம் எதுவும் இல்லை. பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கமும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் இனப் பிரச்சினைக் கான தீர்வுத் திட்டத்தை ஒருபோதும் அக்கட்சி வெளியிடவில்லை. இனப் பிரச்சினைக்கு அக் கட்சியிடம் தீர்வு இல்லை என்பதே இதன் அர்த்தம். பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் இல்லாவிட் டாலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தி லும் திட்டமிட்டுச் செயற்பட்டிருக்கின்றார்கள். அந்தந்த நேரங்களில் ‘சூடானதாக’ உள்ள பிரச்சினையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மக்களைத் திசை திருப்பியிருக்கின்றார்கள். இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையைப் பூதாகரமாகக் காட்டித் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு ரணில் போட்ட திட்டம் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பின ர்களின் விஜயத்தினால் தவிடுபொடி ஆகிவிட்டது. நிவாரணக் கிராமங்களினதும் மீள்குடியேற்றச் செயற்பாட்டினதும் உண்மை நிலையைத் தெரியாமல், மக்களை அரசாங்கம் இம்சிக்கின்றது என்ற பிரசாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் அதனோடு சேர்ந்துள்ள கட்சிகளும் முன்னெடுத்தன. இந்தப் பிரசாரம் வாக்குகளைக் குவிக்கும் என்று அவை எதிர்பார்த்தன. கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் இந்த எதிர்பார்ப்பை ‘ஒன்றுமில்லாமல்’ பண்ணிவிட்டன. “முகாம்களில் வசதிகள் திருப்திகரமாக இருக்கின்றன. மீள்குடியேற்றச் செயற்பாடு சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகி ன்றது. மீள்குடியேற்றப்பட்ட மக்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் அரசாங்கத்துக்கு நன்றி கூற வேண்டும்.” தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்த்து வெளியிட்ட கருத்துகளே இவை. பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் இன்னும் ஒருபடி மேலே போய், ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகி ன்றார். ஐக்கிய தேசிய முன்னணி தமிழ் மக்களின் வாக்குகளை எப்படி எதிர்பார்க்கலாம்?

0 commentaires :

Post a Comment