11/28/2009

சிறுபான்மை இனத்தினரே ஜனாதிபதியினை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துவர்.-நாகலிங்கம் திரவியம் (ஜெயம்)


fdhfdjh30 வருடங்களான யுத்த அனர்த்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபின் நடாத்தப்படவிருக்கின்ற ஜனாதிபதித் தெர்தலில் வெற்றி பெறுவது யார்? மக்கள் யாரினை ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளப்போகின்றார்கள்? என்ற எதிர்பார்ப்பு இலங்கையை கடந்து சர்வதேசம்வரை பேசப்படும் விடயம் ஆகிவிட்ட நிலையில், இலங்கையிலும் அனைத்துக் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் பிரச்சாரத்திற்கான ஆயத்தங்களில் துரிதமாக ஆரம்பித்தள்ளார்கள்.

எது எவ்வாறு அமைந்தாலும் சிறுபான்மை இன மக்களின் வாக்கினை யார் பெறுவார்களோ அவரே ஜனாதிபதியாக பெரும்பான்மை வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது திண்ணம். இதற்கு சான்றாக கடந்த கால வரலாற்று நிகழ்வுகள் பறைசாற்றும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) தெரிவித்தார்;.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ரி.எம்.வி.பி கட்சி இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் குரலாக எதிரொலிக்கும் கட்சி என்பதுடன் இலங்கையிலுள்ள அனைத்து மக்களையும் இனமத மொழி பேதமின்றி நேசிப்பது என்ற வகையில் மக்களினதும் நாட்டினதும் நன்மை கருதி கட்சியின் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தும் எனவும், கிராம மட்ட மக்களின் உளக் குமுறல்களையும் தேவைகளையும் உணர்ந்து சேவை செய்யக் கூடிய நிலைமைகளை கடந்த காலங்களைப் போல் தொடர்தேற்சியாக வழங்க முன்வரவதனை உறுதி செய்ய வேண்டிய கடமைப்பாடும் ஜனாதிபதிக்கு உண்டு என்பதனையும் சுட்டிக் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.



0 commentaires :

Post a Comment