11/26/2009

புலம்பெயர்வாழ் பல்தரப்பு அறிஞர்களுடன் முதலமைச்சர் தலைமையிலான குழு சந்திப்பு

சுவிஸ்லாந்தின் பேர்ளின் நகரில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் அரசியல் சார், ஊடகம் சார், பொருளாதாரம் சார் அறிஞர்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் முக்கிய உயர்மட்ட கலந்துரையாடலில் 18.11.2009 அன்று ஈடுபட்டனர் இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அரசியல் கட்சியின் அரசியல் நிலைப்பாடு, மாகாண சபைகள் எதிர்நோக்கும் சவால்கள் யுத்தத்தின் பின்னரான கிழக்கிலங்கை நிலைமை போன்றன முக்கிய கருப்பொருளாக இருந்தன.

இச்சந்திப்பின்போது புலம் பெயர் வாழ் சமூகத்திடமிருந்து எடுக்கப்பட்ட பல்வேறுபட்ட சந்தேகங்களும் T.M.V.P யின் அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அஷாத் மௌலானா அவர்களும் திறம்படப் பதிலளித்தனர்.

இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த புலம் பெயர் வாழ் சமூகத்தினர் இதவரை நாள் T.M.V.P தொடர்பாக தங்களுக்கு இருந்து வந்த ஐயங்கள் நீங்கப் பெற்றதுடன் முதல்வரின் அணுகுமுறையும் அரசியல் நிலைப்பாடும் வெகுவாக தங்களை கவர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்கள். இச்சந்திப்பில் மாகாண சபை உறுப்பினரும் த.ம.வி.புலிகளின் தேசிய அமைப்பாளருமான எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா (பிரதீப் மாஸ்ட்டர்) திருமலை மாவட்ட அமைப்பாளர் ஜுடி தேவதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
dsc05706

dsc05703

dsc05654




0 commentaires :

Post a Comment