11/07/2009

மூன்று மாதங்களில் மூன்றிலொரு பகுதியினர் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர் - ஐ.நா



யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நலன்புரி கிராமங்களில் தங்கியிருந்த பொதுமக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடந்த மூன்று மாதங்களுக்குள் தமது சொந்த கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அலுவலகத்தின் ஆணையாளர் அன்ரெஜ் மெஹசிக், இலங்கைக்கு மேலும் ஐந்து கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை நாளை சனிக்கிழமை அனுப்பவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் செயற்திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு வாரங்களுக்குள் மாத்திரம் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 39000 பேர் தமது சொந்த கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 163,000 பேர் இன்னும் நிவாரண முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஏனைய சமூக அமைப்புகளுடன் இணைந்து இவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

0 commentaires :

Post a Comment