ஈராக்கில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை பகிஷ்கரிக்கப்போவதாக சுன்னி, குர்திஷ் முஸ்லிம்கள் கூறியுள்ளனர். நவம்பர் 8 ஆம் திகதி ஈராக் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தங்கள் இனங்களைப் புறக்கணிப்பதாகக் கூறிய இவர்கள், இச் சட்டத்திற்கெதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சனிக்கிழமை தலைநகர் பக்தாத் உட்பட முக்கிய நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சுன்னி, குர்திஷ் இன முஸ்லிம்கள் இரண்டாம் தரத்திலுள்ளனர். பிரதமர் நூரி அல்மாலிகி ஷியா இனத்தவராகவும் ஜனாதிபதி ஜலால்தலபானி குர்தீஷ் இனமாகவும் உப ஜனாதிபதி தாரிக் அல்ஹாஸிமி சுன்னி முஸ்லிமாகவும் உள்ளனர்.
இந் நிலையில் ஈராக் பாராளுமன்றத்தில் நீண்டகாலங்களாகக் கிடப்பில் கிடந்த சட்டம் நவம்பர் 08 இல் நிறைவேற்றப்பட்டது. ஜனவரியில் தேர்தல்களை நடத்தவும் 275 ஆக உள்ள பாராளுமன்ற ஆசனங்களை 323 ஆக உயர்த்தவும் அனுமதிக்கப்பட்டது. இனங்களின் சனத் தொகைப் பரம்பலுக்கேற்ப ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டுமெனப் புதிய சட்டம் தெரிவிக்கின்றபோதும் ஆசனங்கள் முறையாகப் பங்கிடப்பட வில்லையென குர்திஷ் - சுன்னி முஸ்லி ம்கள் கூறுகின்றனர். ஈராக் பாராளுமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நவம்பர் 08 இல் நிறைவேற்றப்பட்ட சட்டம் அமெரிக்கப்படையினரின் வெளியேற்றத்தை துரிதப்படுத்தவில்லை. உப ஜனாதிபதியின் அதிகாரங்கள் வீட்டோ அதிகாரத்தின் மூலம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதென்றும் சுன்னி, குர்திஷ் முஸ்லிம்கள் தெரிவித்தனர்.
0 commentaires :
Post a Comment