கொலம்பிய, அமெரிக்க ஒப்பந்தத்தால் ஹியுகோசாவெஸ் கடும் சீற்றம்
நாட்டு மக்களையும், படை வீரர்களையும் யுத்தத்துக்குத் தயாராகுமாறு வெனிசூலா ஜனாதிபதி ஹியுகோசாவெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாராந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே சாவெஸ் இவ்வாறு குறிப்பிட்டார். இராணுவத்தினர், பெண்கள் உட்பட அனைவரும் தாய்நாட்டுக்காக தியாகம் செய்ய முன்வர வேண்டுமென்றும் வெனிசூலா ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொலம்பியாவும் அமெரிக்காவும் இராணுவ உறவுகளை நெருக்கமாக்கும் வகையில் ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்ட பின்னரே ஜனாதிபதி சாவெஸ் இந்த அழைப்பை விடுத்தார்.
கொலம்பியாவின் ஏழு தளங்களை அமெரிக்கா பாவிப்பதற்கு அனுமதியளிக்க இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. செப்டம்பர் 30 இல் அமெரிக்காவும், கொலம்பியாவும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அதன் பின்னர் வெனிசூலாவுக்குள் ஊடுருவி பல கலகங்களை கொலம்பியா தூண்டி வருகின்றது. அண்மையில் கொலம்பிய, வெனிசூலா எல்லைக் காவலில் ஈடுபட்டிருந்த இரண்டு வெனிசூலா வீரர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். இவ்வாறான நடத்தைகளால் வெனிசூலா ஆத்திரமடைந்துள்ளது.
கொலம்பியாவின் எல்லைக்கு மேலதிக இராணுவத்தை அனுப்பியுள்ள வெனிசூலா நாட்டு மக்களையும், இராணுவத்தையும் விளிப்புடன் இருக்கும்படி கேட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment