11/09/2009
| 0 commentaires |
தலாய்லாமா அருணாச்சலம் பகுதிக்கு விஜயம்: சீனா மீது சீற்றம்
திபத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நேற்று அருணாச்சலம் சென்று சீனாவுக்கெதிராக பகிரங்க சொற்பொழிவை ஆற்றினார். இந்திய, சீன எல்லையிலுள்ள அருணாச்சலப் பகுதியை இருநாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. அண்மையில் இந்தியப் பிரதமர் தேர்தல் பிரசாரத்துக்காக அருணாச்சலம் சென்றார். இதை சீனா கடுமையாக எதிர்த்தது. வெளிநாட்டிலிருந்து அருணாச்சலம் வந்த திபத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய தலாய்லாமா கூறியதாவது, சீனாவுக்கெதிராக பூரணமாகவே பிரசாரம் செய்ய இத்தருணத்தை முழுமையாகப் பாவிக்கிறேன். பாலர்களுக்கு நூதனசாலையைத் திறந்து வைத்து திபத் தலைவர் தொடர்ந்து கூறியதாவது, அருணாச்சலத்துக்கு நான் வருகைதந்ததை சீனா வழமைபோல் பெரிதாக்கிப் பிரசாரம் செய்யும். இன்றைய எனது விஜயம் எவ்வித அரசியல் நோக்கமுமற்றது. இங்கு (தவாங்) அருணாச்சலத்தின் முக்கிய பகுதியில் நான் நிற்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். சீனா 1959ம் ஆண்டு மேற்கொண்ட மோசமான இராணுவ நடவடிக்கைகளால் தவாங்கிற்கு ஏராளமான திபத்தியர்கள் தப்பிவந்தனர். நான் சீனாவை விட்டு 1959 இல் தப்பி வந்த பின்னர் உடல், மனநிலையால் பாதிக்கப்பட்டேன். திபத்தியர்களின் பெளத்தமும், கலாசாரமும் கஷ்டமான சூழலைத்தாண்டி நடைபோடுகின்றது எனக் குறிப்பிட்டார். சீனாவின் ஆட்சியிலிருந்து திபத்துக்கு சுய ஆட்சி தர வேண்டுமென தலாய்லாமா கோரி வருகின்றார். 1959 இல் இப்புரட்சி வெடித்தது. சகல உரிமைகளும், சலுகைகளும் திபத்தியர்களுக்கு வழங்கப்படுவதாக சீனா கூறுவதை தலாய்லாமா ஏற்க மறுக்கின்றார். உலகளவில் தலாய்லாமா திபத்துக்கு ஆதரவு கோரி பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
0 commentaires :
Post a Comment