11/13/2009

கிழக்கு மகாண சபையின் அமைச்சர் வாரியக் கூட்டம் மட்டக்களப்பில் இன்று முதன் முதலாக கூடியது.


கிழக்கு மகாண சபையின் அமைச்சர் வாரியக் கூட்டமானது முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள் சகிதம் நடைபெறுவது வழமை. இன்று அமைச்சர்வாரியத்திற்கான 22வது அமர்வு மட்டக்களப்பு மாகாண சபையின் சுற்றுலா விடுதியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர்களினால் முன்வைக்கப்படும் பிரேரணைகள் அமைச்சர் வாரியத்தின் அங்கிகாரத்திற்காக கையளிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 22வது அமைச்சர் வாரியக் கூட்டமானது இன்று கிழக்கு மாகாண சபையின் மட்டக்களப்பில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில் பிற்பகல் 06.00மணியளவில் முதன்முதலாக கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் மாகாண அமைச்சர்களான எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லா, அமைச்சர் உதுமா லெப்பை, அமைச்சர் விமல வீர திஸ்ஸா நாயக்க மற்றும் மாகாண சபையின் பிரதம செயலாளர் பாலசிங்கம் உட்பட செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


0 commentaires :

Post a Comment