11/03/2009
| 0 commentaires |
முன்னே உள்ள எதிர்காலம்' உயர் கல்விக் கண்காட்சி மட்டக்களப்பில்
'ஈ சொப்ட் ' நிறுவனம் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகர் சம்மேளனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு நகரில் ஏற்பாடு செய்திருந்த உயர் கல்விக் கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நேற்றும் இன்றும் மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மண்டபத்தில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.'முன்னே உள்ள எதிர் காலம் ' என்ற தலைப்பிலான இக் கண்காட்சியில் பல்வேறு கல்வி நிறுவனங்களின் காட்சிக் கூடங்களும் வைக்கப்பட்டிருந்தது.
உள்ளூர் ,உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு உயர் கல்வி தொடர்பாக மாணவர்கள் மத்தியல் விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பை ஏற்படுத்தும் வகையில் இக்ண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
0 commentaires :
Post a Comment