11/05/2009
| 0 commentaires |
புலி ஆதரவாளர்களின் கவனத்திற்கு -மனோகணேசன்
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி கைச்சாத்திடும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களை மனதளவில் தோல்வியடையச் செய்தது ஐக்கிய தேசியக் கட்சியே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவே கிளிநொச்சியை படையினர் -கைப்பற்றியமைக்குக்கும் முல்லைத்தீவு காட்டுக்குள் புலிகளை ஒடுக்குவதற்கும் ஏதுவாக அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தீவிரவாதத்தினை ஒழித்த வெற்றியினை அரசாங்கம் தனதாக்கிக் கொள்ள முடியாதெனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment