11/05/2009
| 0 commentaires |
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் தங்கியிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், லண்டனில் தங்கியிருந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே இன்று நாடு திரும்பினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்தியாவிலும்,நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இரு வருடங்களுக்கு மேலாக இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தங்கியிருந்து இறுதியாக லண்டனிலும் தங்கியிருந்தனர்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் செல்வம் அடைக்கலநாதன் விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும்,இன்று மாலை வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வது பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
நாடு திரும்பிய இவர்கள் இருவரும் இன்று நாடாளுமன்ற அமர்விலும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் கடந்த சில மாதங்களாக லண்டனில் தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனும் அடுத்த சில நாட்களில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, எஸ். கஜேந்திரன் ஆகியோர் நாடு திரும்புவது தொடர்பாக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
0 commentaires :
Post a Comment