11/03/2009
| 0 commentaires |
தமிழ்த் தின விழா போட்டியில் மட்டக்களப்பு முதலிடம்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தமிழ்த் தின விழா போட்டியில் இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டம் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
நேற்றும், நேற்று முன் தினமும் வாகரை மகா விதிதியாலய மண்டபத்தில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த் தின விழா போட்டிகள் நடைபெற்றன.
மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதன்மை விருந்தினர்களாக சமூக முன்னோடி எஸ்.செபநாயகம், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரி.எம். ரிஸ்வி, வாகரைப் பிரதேச செயலாளர் ராகுலநாயகி ராசநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களிலிருந்து தெரிவான 62 பாடசாலைகளை உள்ளடக்கிய மாணவர்களிடையே தனியாகவும், குழுவாகவும் 54 போட்டிகள் நடைபெற்றன.
போட்டி முடிவுகளின் படி 159 புள்ளிகளைப் பெற்ற மட்டக்களப்பு மாவட்டம் முதலாவது இடத்தையும், 142 புள்ளிகளைப் பெற்ற திருகோணமலை மாவட்டம் 2ஆவது இடத்தையும் 125 புள்ளிகளைப் பெற்ற கல்முனை மாவட்டம் 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவர்களது குழு நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேற்றப்பட்டன.
குழு நிகழ்சிகளின் போது கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி ஆகக் கூடுதலான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது
0 commentaires :
Post a Comment