இலங்கையின் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்திருக்கிறா
இந்த மாத இறுதியுடன் தான் பதவி விலகப்போவதாக தெரிவித்த பொன்சேகா அவர்கள், தனது இராஜினாமாவுக்கான பல காரணங்களை, அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், இருந்தபோதிலும், தற்போதைக்கு அவற்றை வெளியிட முடியாது என்றும் கூறினார்.
இந்த வருட முற்பகுதியில் முடிவுக்கு வந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கு இலங்கை இராணுவத்துக்கு தலைமை தாங்கியவர் இவராவார்.
சக படையதிகாரிகளுடன் சரத் பொன்சேகா(ஆவணப்படம்) |
சில மாதங்களுக்கு முன்னர் இராணுவ தளபதியாக இருந்து வெறுமனே அலங்கார பதவியாக மாத்திரம் கருதப்படும் தற்போதைய பதவிக்கு அவர் பதவி உயர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன.
0 commentaires :
Post a Comment