11/03/2009

கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு மின்சாரம்




கொக்குவில் இந்துக் கல்லாரி கூடைப்பந்தாட்ட திடலுக்கு மின்சாரம் வழங்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் இ.அகிலதாஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு மின்சாரம் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் மு.நடராசா யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்டத் தலைவர் செ.ரமணன் உட்பட மற்றும் ஆசிரியர்கள் மாணவாகள் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.


மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் ஆண்கள் பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட காட்சி ஆட்டங்களும் இடம் பெற்றன.


0 commentaires :

Post a Comment