அம்பாறை மாவட்டத்தில் செயல் இழந்து போயிருக்கும் மட்பாண்ட உற்பத்தித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றைக் கிழக்கு மாகாண சிறுகைத்தொழில் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் யுத்த காலத்திற்கு முன்பு மட்பாண்ட தொழிலில் ஈடுபட்டுவந்த பெண்கள் பற்றிய விபரங்கள் கிராமசேவையாளர் பிரிவுகளில் இனம்காணப்பட்டு மீண்டும் அவர்களை மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டுள்ளன.
இவர்களால் உற்பத்தி செய்யப்படும் மட்பாண்டங்கள் யாவும் இப்பகுதிகளிலுள்ள கோப் சிற்றிகள் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.
இதே நேரத்தில் மட்பாண்டக் கூட்டுத்தாபனம் இறக்காமத்திலுள்ள ஓட்டுத் தொழிற்சாலையை முழுமையாக நவீனமயப் படுத்தி மட்பாண்டங்களையும் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வதோடு மகோயா, பொத்துவில், ஆகிய இரு இடங்களிலும் உள்ள ஓட்டுத்தொழிற்சாலைகளையும் கிழக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தவுள்ளது எனச் சம்பந்தப்பட்ட அதிகாரி குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment