கிழக்கு மகாணத்தில் முன்பள்ளி கல்வித்துறையினை மேம்படுத்துவதற்கான விசேட செயற்றிட்டம் ஒன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முன் பள்ளிப் பாடசாலை மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்பள்ளி கல்வித்துறையினை அதிகரிக்க நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நேற்று கிழக்கு மாகாண சபையில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் குழுநிலை விவாதத்தின் போது கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டபோது முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணம் கல்வித்தறையில் முன்பள்ளிக் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தனியான பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் இந்தப்பிரிவின் மூலமாகக் கிழக்கில் முன்பள்ளித்துறையை மேம்படுத்தவதற்கு பல்வேறு செயற்றிட்டங்கள் முன் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment