11/25/2009

இலங்கை வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள மஹிந்த சிந்தனை


ஹிந்த சிந்தனை என்பது இலங்கை வரலாற்றின் முக்கியமான சந்தர்ப்பத்தில் புகழ்மிக்க திட்டங்களடங்கிய வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு வரைவாகும். இது ஒரு தேர்தல் உறுதி மாத்திரமன்றி பொதுவாகவே செயல்படுத்த முடியுமான செயலாற்றலுக்குக் கொண்டுவரக் கூடிய ஒரு திட்டமாதலால் இது ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு திருப்பமாகவும் உள்ளது. இத்திட்டத்தினை முற்படுத்தும் போது இலங்கைச் சமூகம், பிரிந்து வேறுபட்டு இருந்ததோடு குரோதமனப்பான்மையும் மிக மும்முரமாகவே இருந்தது. இந்த கோபதாபம் அகற்றப்பட்டு தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்தி மனித மனங்களில் பலவந்தமாக புகுத்தப்பட்ட தாழ்வு நிலையை அகற்றி சிறந்த சமூக கட்டமைப்பொன்றை உருவாக்குவதே “வடக்கின் வசந்தமாகும்” இந்த தேசிய வேலைத் திட்டத்தினூடாக ‘பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்துதல், சிசு திரிய,’ போன்றவற்றை தேசிய ரீதியில் அமுல்படுத்தி சமூக மேற்பாட்டிற்கான பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கை அடையும் பொருட்டு சமூக அபிவிருத்தி அலுவல்கள் சம்பந்தமான ஆணையாளர் பதவியொன்றையும் நிர்மாணித்துள்ளதோடு கஷ்டப் பிரதேசங்கள் மற்றும் வளம் குன்றிய பகுதிகளும் உள்ளடக்கப்பட்டவாறு செயல்படுவதற்கு அந்த ஆணையாளருக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தல் மற்றும் சிசுதிரிய திட்டங்களின் ஆரம்பக்கட்ட வேலைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 2006-07-12ம் திகதி முதல் 16ம் திகதி வரை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம், கலகம் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதிகளில் வாழும் இளம் பாடசாலைச் சிறார்கள் தமது அறிவு மற்றும் பொழுதுபோக்கை மேம்படுத்திக் கொண்டவாறு பிரயோசனம் சுய அபிமானம், மற்றும் தன்னாற்றல் வளம், தேசிய பொறுப்பு, தலைமைத்துவம், கவின் கலை, கலகங்களை சமாதானப்படுத்துதல், உளத்தாக்கம், மனோ தத்துவ அறிவுரை, மற்றும் உளப்பாங்கை அதிகரித்தல் போன்றவற்றிற்குப் புறம்பாக உயர்தர வகுப்புக்களின் பாடங்கள் சம்பந்தமான போதனைகளுக்குச் சமுகமளித்து தமதறிவை அதிகரித்துக் கொள்கின்றனர். தேசிய இலக்கை செயற்பாட்டு ரீதியாகப் பெற்றுக் கொள்வதற்காக போர் நடைபெறுகின்ற கிராமங்களின் பாடசாலைகளுக்குச் சென்று அவர்களுடன் ஒன்றிணைந்து அவர்களது அறிவை உரசிப்பார்த்து அதனை அபிவிருத்தி செய்வதை மிக உயர்வாக எண்ணலாம். அவற்றான பகுதிகளிலுள்ள பல பாடசாலைகளின் இந்த தேசிய திட்டத்தை அமுல்படுத்தி அதில் பாடசாலைச் சிறார்களை பங்கு கொள்ளச் செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரம், பொலன்னறுவை, மன்னார், வவுனியா, திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு போன்ற வட-கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணப் பாடசாலைகளின் இளம் மாணவ மாணவிகளை உள்ளடக்கி இத்திட்டத்தின் மூலமாக நற்பயன் பெறப்பட்டுள்ளது. இதற்காக அறிஞர்கள், கல்விமான்கள் தமது பங்களிப்பையும் வழங்கியுள்ளனர். அவ்வாறே மதத் தலைவர்களின் ஆசீர்வாதமும் இத்திட்டத்தை சிறப்பாக நடாத்த பேருதவியாக இருந்தது. மேலும் வடக்கின் குழந்தைகள்- தெற்கின் குழந்தைகளுடன் நல்லுறவை அபிவிருத்தி செய்வதற்காக கொழும்பு ஆனந்தாக் கல்லூரி, டீ. எஸ். சேனாநாயக்கா வித்தியாலயம், கிராண்ட்பாஸ் சங்கபோதி வித்தியாலயம், ஹோமாகம ம. வித்தியாலயம், கே/ தோலங்கமுவ டட்லி சேனநாயக்க ம. வி., கண்டி மகாமாய வித்தியாலயம் போன்ற கல்லூரிகளை ஒன்றிணைத்து சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டது. இதனூடாக தமிழ்- சிங்கள- முஸ்லிம் மாணவர்களிடையே இருந்த வேற்றுமை, இடைவெளி, பீதி, சந்தேகம் அகற்றப்பட்டு அன்பு, பாசம், காரண காரியம் புரிந்துணர்வு அபிவிருத்தியடைந்துள்ளதாக உறுதியாகியுள்ளது. இதனை நோக்கும் போத மஹிந்த சிந்தனையின் அர்த்தபூர்வ தன்மை வெளிப்படுகின்றது. மேலும் யுத்தம் நடைபெறுகின்ற பிரதேசங்களின் பிள்ளைகளின் அழகுக்கலை, தயாரிப்புத் திறன் போன்ற தன்மைகளை மேம்படுத்திக் கொள்ளவும், சிசுதிரிய மூலம் அளிக்கப்படும் பங்கு மிக அதிகமாகும் பாடசாலைப் பிள்ளைகளால் பல தலைப்புக்களின் கீழ் நடத்தப்பட்ட ஓவியக் கண்காட்சியும் இங்கு சிறப்பாக நடைபெற்றது. மேலும் ஆடல், பேச்சுப்போட்டிகளும் அவர்களிடம் மறைந்திருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்து காட்டியது. பண்பாட்டு விழுமியங்கள் மேம்பாடு, சிசு திரிய திட்டத்தின் கீழ் வலப்பனைப் பகுதியில் மருந்து முகாம், புலமைப்பரிசில் உட்கட்டமைப்புத் திட்டங்கள், பூ மற்றும் தாவர நடுகை, பாடசாலை பூவளர்த்தல் திட்டம், முகாமைத்துவம் முக்கிய விடயங்களாக இத்திட்டத்தில் இடம்பெற்றன. செங்கடகல நவோதய திட்டத்தின் கீழும் ஆடல், பாடல், பேச்சு, சூழல் பாதுகாப்பு, விளம்பரம், அனர்த்த முகாமைத்துவம் போன்ற வேலைத்திட்டங்களும், சுய தொழிலுக்கான கடன் வசதி, புகைப்படக் கண்காட்சி, மனித உரிமைப் பயிற்சிகள், கல்வி கருத்தரங்குகள் நடத்துதல் போன்றவற்றிற்கு கற்ற, வசதி படைத்த அரச சார்புள்ள மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பும் இங்கு மிக முக்கியமானதாகும். மேன்மைமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நாலாண்டு பூர்த்தியாவதுடன், மஹிந்த சிந்தனையில் எழுதி வாக்களித்தவாறு வடக்கின் வசந்தம், பண்பாட்டு விழுமியங்களின் அபிவிருத்தி மற்றும் சிசு திரிய அங்கு குறிபபிட்டவாறே வெற்றிப்பாதையில் வீறுநடைபோடுகின்றன. முழு மூச்சாக காரியமாற்றிய அதன் ஆணையாளர் மற்றும் அதன் சக ஊழியர்களுக்கு இது மட்டற்ற மகிழ்ச்சியாகும். இதனூடாக சமூகத்தில் இதுவரை புரையோடியிருந்த ஜாதி, மத, மொழி, குல வாதங்களினால் ஏற்பட்டிருந்த அவல நிலையகன்று, சமூக அபிவிருத்திக்கான உறுதிவாய்ந்ததொரு சமூகத்தை நாட்டின் அபிவிருத்திக்காக உருவாக்குவதற்கு ஜனாதிபதி அவர்களின் நாலாண்டு சேவை பூர்த்தியையொட்டி வட- கிழக்கு மாணவ மணிகளின் ஒன்று திரள்வோடு பல செயற்திட்டங்களும், முகாம்களும் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சிகள் 19ம் திகதி முதல் 25ம் திகதிவரை நடைபெறுவதோடு, 25ம் திகதி இன்று வட- கிழக்குப் பகுதியிலிருந்து வரும் 1000 பேரளவு மாணவ மாணவிகளுடன் அலரிமாளிகையில் சினேகபூர்வ சந்திப்பொன்றும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


0 commentaires :

Post a Comment