11/24/2009
| 0 commentaires |
ஜனாதிபதித் தேர்தல் முதலில் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக தேர்தலுக்கு முகம் கொடுக்க ஜனாதிபதி தீர்மானம்
உரிய காலத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்து ள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானம் குறித்து தேர்தல் ஆணை யாளருக்கு நேற்று நண்பகல் சுப நேரத்தில் அறிவிக்கப் பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்தத் தீர்மானித்திருப்பதாக கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி இங்கு அறிவித்தார். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை கட்சித் தலைவர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாகவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார். ஜனாதிபதியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவதாக கட்சித் தலைவர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர். இந்தச் சந்திப்பில் சகல மாகாண சபை முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 2005 நம்பவர் 18ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவரின் பதவிக் காலம் 2011 நவம்பர் 18 ஆம் திகதி நிறைவ டைய உள்ள நிலையில் ஜனாதிப தித் தேர்தலை முன்கூட்டி நடத்த ஜனாதிபதி முடிவு செய்துள்ளார ஜனாதிபதி தனது முடிவை முறைப்படி கடிதம் மூலமாக நேற்று (23) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்தார். இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் திகதியை தேர்தல் ஆணையாளர் வெகுவிரைவில் அறிவிப்பார் என தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின. நான்காண்டுகள் முடிவடைந்த பின்னர் எந்த நேரத்திலும், மேலுமொரு தவணைக்குப் பதவி வகிப்பதற்காக தேர்தல் மூலம் ஆணையொன்றுக்கென மக்களை வேண்டி நிற்பதற்கான தமது முன்னத்தை பிரகடனம் மூலம் வெளிப்படுத்தலாம் என அரசியலமைப்பின் 31 (3) (அ) (1) இந்த சரத்து ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன்படி முன்கூட்டி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்தப்பட உள்ள அறிவிப்பு வெளியானதை யடுத்து நாட்டின் பலபாகங்களிலும் நீலக் கொடி ஏற்றி பட்டாசு கொளுத்தி மக்கள் தமது வரவேற்பை தெரிவித்தனர் கடந்த 15ம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய மாநாட்டின் போது எந்தத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என கூடி இருந்த பெருந்திரளான மக்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியிருந்தார். ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்துமாறு சகல மக்களும் கைகளை உயர்த்திக் கேட்டுக் கொண்டனர். மக்களின் வேண்டுதலையும் கூட்டுக் கட்சிகளின் அபிப்பிராயத்தையும் பெற்று ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்த ஜனாதிபதி தீர்மானித் துள்ளார்
0 commentaires :
Post a Comment