11/03/2009
| 0 commentaires |
எதிரி நாடுகள் கொசுவுக்கு சமமானவை - ஈரான் ஜனாதிபதி
ஈரானிடம் உள்ள சக்தியை ஒப்பிடுகையில், எதிரி நாடுகள் கொசுவுக்கு சமமானவை என அந்நாட்டு ஜனாதிபதி அகமதி நிஜாத் தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் திறனை பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் ஈரான் 18 மாதங்களில் ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க முடியும் என ஐரோப்பிய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஈரான், யுரேனியத்தை செறிவூட்டாதபடி பார்த்துக் கொள்ள மேற்கத்திய நடுகள் முயற்சி செய்து வருகின்றன. யுரேனியத்தை செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், பொருளாதார அரசியல் சலுகைகள் தருவதாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆசை காட்டி பார்த்தன. ஆனால், இதை ஈரான் நிராகரித்துவிட்டது. மருத்துவப்பணிக்கான ஐசோடோப்புகளை தயாரிக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
ஆனால், இதை தயாரிப்பதற்குரிய அணு உலை கலனில் பொருத்தக்கூடிய சாதனம் ஈரானிடம் இல்லை. இந்த இணைப்பு கலனை செய்து தர பிரான்சும், ரஷ்யாவும் முன்வந்துள்ளன. ஆனால், ஈரான் தன்னிடம் உள்ள குறைவாக செறிவூட்டிய யுரேனியத்தை தங்களிடம் அளிக்கும்படி இந்த நாடுகள் நிபந்தனை விதித்துள்ளன. இந்த நாடுகளுக்கு குறிப்பிட்ட அளவு யுரேனியத்தை அனுப்ப, ஈரான் ஆலோசித்து வருகிறது.
இது குறித்து ஈரான் அதிபர் அகமதி நிஜாத் இணையத் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடுகையில் :
மேற்கத்திய நாடுகள் ஈரானுக்கு எதிராக பல்வேறு யுக்திகளை மேற்கொள்கின்றன. இதற்கு ஈரான் ஒரு போதும் அடிபணியாது. எதிரிகளுக்கு மந்தியில் ஈரான் சக்திவாய்ந்ததாக உள்ளது.
எதிரிகள் கொசுவுக்கு சமமாக உள்ளன என தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment