கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிப ராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வரும் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் நேற்று தொடக்கம் நிய மிக்கப்பட்டுள்ளார்.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணை யாளராகவும் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபராகவும் சுனாமி வேலைத்திட்டத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியதுடன் தற்போது மட்டக் களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதி பராக கடமையாற்றுகின்றார்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப் பட்டுள்ள திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் எதிர்வரும் திங்கட்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
0 commentaires :
Post a Comment