கிழக்கு மாகாணத்தின் அரசியல் நிலவரம் மற்றும் கிழக்கிலங்கை அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து ஐரோப்பிய சமூகத்துடன் உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான குழு நாளை ஐரோப்பா பயணமாகின்றது. கிழக்கு மக்களின் அரசியல் பின்னணி, கிழக்கு ஜனநாயகக் கட்சியான த.ம.வி.பு கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக புலம் பெயர் தமிழ் மக்களுக்கு விளக்கும் முகமாக பல கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகிறது. இச்சுற்றுப்பயணத்தில் த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கிழக்கு மாகாண முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி திருமதி ஜுடி தேவதாசன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் த.ம.வி.புலிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான திரு அஸாத் மௌலான ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியினர் ஏற்பாடு வருகின்றனர்.
0 commentaires :
Post a Comment