11/13/2009

மியன்மார் தலைவர் இலங்கை வருகை விமான நிலையத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்பு


மியன்மார் நாட்டின் அரச தலைவரும், சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கவுன்ஸிலின் தவிசாளருமான ஜெனரல் தான்செவே நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்தார் விஷேட விமானத்தில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று நண்பகல் வந்தடைந்த மியன்மார் நாட்டின் அரச தலைவரையும், அவரது தலைமையிலான தூதுக் குழுவினரையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் வரவேற்றனர். 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மியன்மார் நாட்டுத் தலைவர் வரவேற்கப்பட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மியன்மார் நாட்டின் அரச தலைவருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று மாலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள மியன்மார் நாட்டின் தலைவர் இலங்கையிலுள்ள புனித ஸ்தலங்களை தரிசிப்பதுடன் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும் பார்வையிடவுள்ளார் இவரது வருகையின் நிமித்தம் மேல் மகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, அமைச்சர்கள் ரோஹித போகொல்லாகம, பந்துல குணவர்தன, பீலிக்ஸ் பெரேரா, மஹிந்த யாப்பா அபேவர்தன, மேர்வின் சில்வா, சரத்குமார குணரத்ன, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பிரதம பாதுகாப்பு அதிகாரி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.


0 commentaires :

Post a Comment