11/15/2009

ரி.எம்.வி.பி. யின் தலைவர் ரகு அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி.

கிழக்கு மாகாணம் பெயர் சொல்லும் படியான அரசியல் தலைவர்கள் எவரையும் பெற்றுதரமுடியாத சபிக்கப்பட்ட ப+மியாய் வரலாறு தொடர்ந்தது. திருகோணமலையிலிருந்து இராஜவரோதயமும் , பட்டிருப்பிலிருந்து இராஜமாணிக்கமும், மட்டக்களப்பிலிருந்து இராஜதுரையும் அந்த வரலாற்றை உடைத்தெறிந்து கொண்டு வெளியேவந்தார்கள். ஆனால் தமிழ் சமூகத்தின் அதிகார மையமாகத் திகழ்ந்த யாழ் மேலாதிக்கம் அவர்களின் வரவை ஒரு அளவிற்கு மேல் அனுமதிக்கவில்லை. மட்டம்தட்டி மட்டக்களப்பானை மடையர்களாக்கிய வரலாறுதான் மீண்டும் தொடர்ந்தது. இதற்கப்பாலும் நல்லையாவும், தேவநாயகமும், அஸ்ரப்பும்கூட நல்ல தலைவர்களாக வலம் வந்தபோதும் அதே மேலாதிக்கம் அள்ளிவீசிய துரோகசேறு எனும் கறையை வெல்லும் வல்லமை அவர்களுக்கு வாய்க்கவில்லை.
இப்படித்தான் கிள்ளுக்கீரையாக ஒரு நொண்டித்தேசமாக நலிந்து கிடந்தது கிழக்கிலங்கை. வடமாகாணத்துடன் அடாத்தாக இணைக்கப்பட்ட கிழக்கு மாகாணம் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தீர்க்கமான போராட்டத்தால் சுயநிர்ணயம் எனும் சுதந்திர காற்றை சுவாசிக்கத்தொடங்கியது. அந்தவேளையில்தான் சுதந்திர கிழக்கின் அரசியல் வரலாற்றில் முதன்முதலான ஒரு அரசியல் கட்சியாக பரிணமிக்கும் புனிதமான அந்த அரசியல் பாத்திரத்தை த.ம.வி.புலிகள் ஏற்றனர். அந்த த.ம.வி.புலிகளை துரோகிகளாக, ஆயுததாரிகளாக, மேலாதிக்கவாதிகள் சித்தரித்த போதும், துயரும் துன்பமும் நிறைந்த போராட்டக் களத்தில் உழன்ற பொதுமக்கள் அரசியல் பேசுபவர்களையே எதிரிகளாகப் பார்க்கின்ற இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டத்தில் கூடி நின்று கூவிபிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாத எமது மக்கள் மான உணச்சிகள் அற்ற மந்தைகளாக மடிந்துகிடந்த வேளையிலும் அவர்களுக்கு தலைமையேற்க துடித்தெழுந்து வந்தவன்தான் எங்கள் ரகு ஆகும்.
புலிகள் எனும் ஒரு மாபெரும் பாசிசக் கூடாரத்தில் இருந்து வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு ஜனநாயக வேலைத்திட்டத்தில் அவர்களை பயிற்றுவிக்கும் பணியை தோழிலே சுமந்தவன் அவன். கடந்த சுமார் 25 வருட கால யுத்த தேசத்திலே அமைதியை நிலைநாட்டுவதென்பது மாபெரும் சவாலாகும். அதுமட்டுமன்றி ஆயுதக்கலாச்சாரமும் வன்முறைகளும் பயந்த சூழலும், பல்லின முரண்பாடுகளும், பஞ்சமும் கூடவே சமூகக் கொடுமைகளும் பரவிக் கிடந்ததொரு தேசத்தில் புதியதொரு அரசியல் கட்சிய+டாக ஜனநாயகக் கட்டுமானங்களை உருவாக்குவதற்கும், ஜனநாயக விழுமியங்களை தூக்கி நிமிர்த்துவதற்கும், ஜனநாயக மீட்சியை கொண்டுவருவதற்குமான கடும் சிரமம் மிகுந்த பணிகளை பொறுப்பேற்றவன் அவன். எச்சிரமமே ஆனாலும் அத்தனை சவால்களையும் நேருக்கு நேர் முன்கொண்டு சமாளித்து முன்னேறும் பலம் எங்கள் ரகுவிடம் இருந்தது என்பதை அவனுடன் கூடிச் செயற்பட்ட வேளைகளில் என்னால் கண்டுகொள்ள முடிந்தது. தான் உயிருடன் வாழும் இந்த நிகழ்காலத்திலேயே ஒரு அரசியல் தன்நிலை கொண்ட சமூகமாக கிழக்கினை கட்டியெழுப்பி விட வேண்டும் என்ற அவா மிகுந்தவையாக அவனது செயற்பாடுகள் வேகம் பெற்று நின்றன. எமது தேசத்திலே வன்முறைக்கும் அமைதிக்கும் இடையிலான ஒரு பாலமாக ஏற்பட்டிருந்த அந்த ஜனநாயக போராட்ட இடைவெளியை நிரப்ப முன்வருபவர்கள் யார் என்ற கேள்வியை வரலாறு விட்டெறிந்தபோது ரகு அந்த வரலாற்றின் முன்னே நின்று மு~;டியை உயர்த்தியவன் என்ற பெருமைக்குரியவன். “சொந்த அரசும் புவி சுகங்களும் மாண்புகளும்” வரலாறு நெடுகிலும் கல்லானாகவும், பொல்லானாகவும் மட்டுமே சித்தரிக்கப்பட்டுவந்த மட்டக்களப்பானால் சுவைக்கப்படவேண்டும் என்பது அவனது எத்தனமாக இருந்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ஜனநாயக அரசியல் நீரோட்டத்துக்கு இழுத்து வந்ததிலும் சரி, இன்றுள்ள கிழக்கு மாகாண அரசை உருவாக்கிய மாபெரும் அர்ப்பணிப்புகளிலும் சரி இந்த ரகுவின் பங்கு அளப்பெரியது. ‘செய் அல்லது செத்துமடி’ என்று சொல்லித்தந்த பலரை எம்வாழ்வில் கண்டிருக்கிறோம். ஆனால் ‘சொற்களிலேயே சிறந்த சொல் செயல்தான்’ என்பதை எமக்கு கற்றுத்தந்தவொரு மனிதன் இந்த ரகுதான் என்பதை அவன் சாவை எதிர்கொண்ட விதம் எமக்கு உணர்த்திநிற்கின்றது. கருத்தியல் ரீதியான போராட்டத்தில் மட்டுமல்ல களப்பணிகளிலும் அவன் கைதேர்தவனாக இருந்தான். புனருத்தாரணம், புனர்நிர்மாணம், மற்றும் மீள்குடியேற்றம்..... என்று நேரடியான களச்செயற்பாட்டாளனாகவும் அவனது நேரங்கள் ஓய்வின்றி கடந்தன. “இது எங்கள் நிலம் யாரும் வந்து இங்கு மீளக்குடியேற எமக்கு அனுமதி தரும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நாங்கள் இருக்கிறோம். தைரியாமாகக் குடியேறுங்கள்.” என்று சம்ப+ர் பிரதேச மீள்குடியேற்ற தொடக்க நிகழ்வின் போது அவன் கர்ச்சித்த வரிகள் என் காதுகளுக்குள் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
எடுத்த காரியம் யாவினையும் திறம்பட முடிக்கும் துணிச்சலும், வசீகரமும், மாறாத நேர்மையும், உற்சாகமும் மட்டுமல்ல நகைச்சுவையுணர்வும் ஒருங்கே வரப்பெற்ற உருவம் ரகுவினுடையது. ஆகவேதான் “அவர்கள்” அந்த மனிதனை வாழவிடக்கூடாது என்று கங்கணம் கட்டினார்கள். கிழக்கிலங்கை மீண்டும் ஒரு தலைவனை இழந்தது.
அமெரிக்க கறுப்பின மக்களின் உன்னதமிகு தலைவரான ‘மால்க்கம் எக்ஸ்’ எனும் மனிதனை 39 வயதுக்கு மேல் வாழ கொலையாழிகள் எப்படி அனுமதிக்கவில்லையோ, அதேபோன்றுதான் கிழக்கு மாகாணத்தின் அரசியல் வேட்கை கொண்ட விறல்மிகு தலைவனாய் சுழன்று திரிந்த எங்கள் ரகுவையும் அவனது 39 வயதுக்கு மேல் கொலையாளிகள் விட்டுவைக்கவில்லை. ஆனாலும் கறுப்பின மக்களின் வரலாறெல்லாம் எப்படி அந்த ‘மால்க்கம் எக்ஸ்’ இன் வாழ்வு நீண்டு தொடர்கிறதோ அதே போன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தொடங்கிவைத்திருக்கும் அரசியல் பாத்திரத்தினூடாக நெஞ்சுநிமிர்த்தி நிற்கப்போகும் கிழக்கு மாகாணத்தின் எதிர்கால வரலாறெங்கும் அதன் முதல் தலைவனான ரகுவின் பக்கங்களும் எல்லையற்று விரியும்.



ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி-kilakku@hotmail.com

14/11/2009

0 commentaires :

Post a Comment