11/14/2009

த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் முதல் தடவையாக நீதிமன்றத்தில் ஆஜர்



தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சதாசிவம் கனகரத்தினம் இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் பதில் நீதவான் எம்.சிற்றம்பலம் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.

இவர் மீதான விசாரணைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என்றும், மேலும் அவரை விசாரணை செய்ய வேண்டியிருப்பதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து, எதிர்வரும் 4 ஆம் திகதி மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே வன்னிப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் முல்லைத்தீவு பிரதேசத்தில் தமது குடும்பத்தினருடன் இவர் வாழ்ந்து வந்தார்

. இராணுவம் முல்லைத்தீவு பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்றிய போது, பொதுமக்களுடன் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்த இவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாத காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

0 commentaires :

Post a Comment