முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மீளக் குடியமர்ந்த பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக 17ஆம் திகதி விவ சாயக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அரச அதிபர் கூறினார். இதன் போது 10 சிறிய குளங்களையும் 10 பெரிய குளங்களையும் புனரமைப்புச் செய்து விவசாயத்துக்குத் தேவையான நீர்ப்பாசனத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராயப்பட வுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினத்துடன் 1682 குடும்பங்களைச் சேர்ந்த 5532 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள தாக அரச அதிபர் குறிப்பிட்டார்.
எதிர் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 4415 குடும் பங்களைச் சேர்ந்த 16394 பேரை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாக வும் அரச அதிபர் தெரிவித்தார். குறித்த காலப் பகுதிக்குள் துணுக்காய் பிரதேசத்தில் 10312 பேரும், மாந்தையில் 4691 பேரும், ஒட்டுச்சுட்டானில் 1391 பேரும் மீளக் குடியமர்த்தப்படுவர் என அரசாங்க அதி பர் மேலும் கூறினார்.
0 commentaires :
Post a Comment