நாட்டிலுள்ள மிகப்பெரிய அரசியல் கூட்டணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகுமென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அரசாங்கக் கூட்டமைப்பில் 32 அரசியல் கட்சிகள் உள்ளதாகவும், எதிர்க்கட்சி கைச்சாத்திட்டதாகக் கூறப்படுவது ஓர் அரசியல் கூட்டமைப்பே அல்லவென்றும் அமைச்சர் கூறினார்.
“ஆளுந்தரப்புக் கூட்டமைப்பில் அங்கீகாரம் பெற்றதும், அடிப்படை உள்ளதுமான கட்சிகளும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள கட்சிகளும் இணைந்து செயற்படுகின்றன. 18 கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, முன்னணியில் அங்கம் வகிக்கின்றன.
அதேநேரம் 14 கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவாகச் செயற்படுகின்றன,” என்று குறிப்பிட்ட அமைச்சர் யாப்பா, ஐக்கிய தேசிய கட்சி கடந்த இரண்டு வாரங்களாகத் தம்பட்டம் அடித்ததைப் போல் புதிய கூட்டணி எதுவும் உருவாகவில்லை என்றும் பைசிக்கள், ஆட்டோ கட்சிகளே இணைந்துள்ளதாகவும் அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்
“சில பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்களின் பெயரில் உள்ள கட்சிகளும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்ந்துள்ளன. அரசாங்கத்துக்கு சம்பந்தப்பட்ட எவரும் கூட்டணியில் சேரவில்லை. எனவே, எதிர்க்கட்சிக் கூட்டணி யால் அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதென்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பியசேன கமகே அபிவிருத்திக்கான தேசிய ஊடக நிலைய த்தின் பணிப்பாளர் ஆரிய ரூபசிங்க, அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 commentaires :
Post a Comment