வடக்கில் இடம்பெற்று வரும் மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகள் அப்பிரதேசத்தில் சுமுக நிலையைத் தோற்றுவிப்பதில் அரசாங்கம் கொண் டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகின்றன. எதிரணித் தலைவர்கள் எவ்வளவுதான் எதிர்ப் பிரசாரத்தை முன் னெடுத்தாலும், மீள்குடியேற்றமும் புனர்வாழ்வு அளிக்கும் செயற்பாடும் திருப்திகரமான முறையில் இடம்பெறுகின்றன என்பதை நடுநிலையாளர்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா மீள்குடியேற்றச் செயற்பாட்டுக்கு அண்மையில் பாராளுமன்றத்தில் பாராட்டுத் தெரிவித்ததை இங்கு சுட்டிக்காட்டலாம். மல்லாவி, பூநகரி மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் டிசம்பர் மாத முடிவுக்கு முன் 28500 பேர் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணுக்காய், யோகபுரம் மகாவித்தியாலயங்கள் நேற்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன. ஏனைய பாடசாலைகளையும் இயக்குவ தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாண வர்களுக்குத் தேவையான புத்தகங்களும் உபகரணங்களும் மாத்திரமன்றி ஆசிரியர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகளும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்குத் தேவையான பசளை வகைகளையும் அரசாங்கம் வழங் கியிருக்கின்றது. இவ்வளவையும் அரசாங்கம் செய்கின்றதென எடுத்துக் காட்டும் அதேவேளை, மக்கள் இப்பிரதேசங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிலையும் பாடசாலைகள் செயற்பட முடியாத நிலையும் ஏன் ஏற்பட்டன என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். அரசாங்கத்துடனான மோதல் அரசிய லில் புலிகள் ஈடுபட்டதன் விளைவே இவை என்று சுருக்க மாகக் கூறலாம். புலிகள் முன்வைத்த தனிநாட்டுக் கோரிக்கை எவ்விதத்திலும் நடைமுறைச் சாத்தியமற்றது. இத்தகைய கோரிக்கையுட னான செயற்பாடு மோதல் அரசியலிலேயே முடிவுறும். அப்பாவி மக்களையும் அவர்களின் அமைதியான வாழ்க் கையையும் பலி கொண்டதைத் தவிர, புலிகளின் மோதல் அரசியல் வேறெந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மோதல் அரசியலில் பங்காளிகளாகியமை துரதிஷ்ட மானது. மோதல் அரசியலின் பாதகமான விளைவுகளை கண்கூடாகக் கண்ட நிலையில் அவர்கள் சரியான அரசியல் பாதைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. தெளிவாகக் கூறுவதானால், இணக்க அரசியலுக்கு அவர்கள் வருவது தான் தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான வழி. இணக்க அரசியல் எனக் கூறும்போது சரணாகதி என்று அர்த்தமாகாது. அது மோதலற்ற அரசியல், இனப் பிரச் சினைக்கு நியாயமான தீர்வைக் காண்பது இணக்க அரசி யலின் மூலமே சாத்தியமாகும். ஒரே தடவையில் முழு மையான அரசியல் தீர்வை வலியுறுத்துவது இலங்கையின் சமகால யதார்த்தப் பின்னணியில் இணக்க அரசியலுக்கான அணுகுமுறையாகாது. இப்போது உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடியதாகப் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளது. அதனிலும் பார்க்கக் கூடுதலான தீர்வை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாக அரசாங்கம் கூறுகின்றது. > கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வுக்காகப் பதின் மூன்றாவது திருத்தத்தை நிராகரிப்பதோ முழுமையான தீர் வுக்காகப் பதின் மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடு தலான அதிகாரங்களுடனான தீர்வை நிராகரிப்பதோ சரி யான அணுகுமுறையாகாது. சாத்தியமான தீர்வை ஏற்றுக் கொண்டு முழுமையான தீர்வுக்காகத் தொடர்ந்து முயற்சிப் பதே சரியான அணுகுமுறை. மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தாமல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் இதுவே பொருத்தமானது. இணக்க அரசியல் மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வருவதில் தமிழ்த் தலைவர்களுக்கு இனியும் தாமதம் இருத்தலாகாது. |
11/10/2009
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment