ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களின் முன்னணி மக்கள் மத்தியில் ‘பேசுபொருள்’ ஆகவில்லை. கட்சிகள் கூட்டுச் சேர்ந்து ஒரு முன்னணியை அமைக்கும் போது அதுபற்றி மக்கள் பரபரப்பாகப் பேசுவது வழக்கம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணியைப்பற்றி அப்படி எவரும் பேசியதாக இல்லை. காரணம் பானை புதியதேயொழிய சாதம் பழையதே இந்த முன்னணிக்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டவர்களுள் ரணில் விக்கிரமசிங்ஹ, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், மங்கள சமரவீர ஆகிய நால்வரும் தான் அரசியல்வாதிகளென மக்களால் அறியப்பட்டவர்கள். மற்றவர்கள் மக்கள் கண்டும் கேட்டுமிராத பேர்வழிகள். இவர்களின் கட்சிகளைக் கூட இப்போது தான் மக்கள் முதல்முதலாகக் கேள்விப்படுகின்றார்கள். ஒரு முச்சக்கர வண்டியில் பயணம் செய்வதற்குக் கூட இந்தக் கட்சிகளில் அங்கத்தவர்கள் இருப்பார்களோ என்பது சந்தேகமே. மங்கள சமரவீர போக்கிடம் இல்லா மல் தனிமரமாக ஐக்கிய தேசியக் கட்சி யில் தஞ்சமடைந்தவர். இவருக்கு இனி மேல் எல்லாமே ரணில்தான். ரவூப் ஹக்கீமும் மனோ கணேசனும் காலங் காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிகள். தேர்தல்களில் யானைச் சின்னத்திலேயே போட்டியிடுபவர்கள். புதிதாக ஐக்கிய தேசிய முன்னணி அமைத்திருப்பதாக இவர்கள் கூறினால் மக்கள் சிரிப்பார்கள். பெரிதாக எடுக்கமாட்டார்கள். மக்களை மடையர்கள் என்று நினை த்துக் கொண்டு நடத்தும் நாடகமே இந்த முன்னணி. இதை விளங்கிக் கொண்டதாலாக இருக்கலாம், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பா ளர் எஸ். பி. திஸாநாயக கையொப்ப நிகழ்ச்சியில் பங்குபற்றவில்லை. இதற்குப் பின்னால் இன்னொரு நாடகமும் இருக்கின்றது. தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையிலும் ரவூப் ஹக்கீமும் மனோ கணேசனும் பங்கு பற்றியிருக்கின்றார்கள். இவர்கள் எதற்கு விசுவாசமாக இருக்கப் போகிறார்கள்? ஐக்கிய தேசிய முன்னணிக்கா? அல்லது தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டமைப்புக்கா? தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு ஐக்கிய தேசிய முன்னணியில் இருக்கின்றார்களென வைத்துக் கொள்வோம். அப்படியானால் இனப் பிரச்சினைக்கான தீர்வுபற்றிய தெளிவான நிலைப்பாட்டை இவர்கள் வெளிப்படுத்த வேண்டும். இவர்கள் அமைத்துள்ள முன்னணியில் இனவாதப் பின்னணி கொண்ட நவ சிஹல உருமயவும் இருப்பதனால் இது முக்கியத்துவம் பெறுகின்றது. இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு வெட்ட வெளிச்சமானது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்க கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு என்று ஜனாதிபதி பல தடவைகள் கூறியுள்ளார். இத் தீர்வுக்கு எதிரான கருத்துடையவர்கள் முன்னணி யில் உள்ள போதிலும் இதுதான் தீர்வு என்று ஜனாதிபதி துணிகரமாக வெளிப்படுத்தியிருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் இனப் பிரச்சினைக்கான தீர்வு எது என்று ரவூப் ஹக்கீமும் மனோ கணேசனும் ரணிலைச் சொல்ல வைப்பார்களா? ஐக்கிய தேசிய முன்னணிக்குள் ஆரம்பத்திலேயே தலைமை மட்டத்தில் முரண்பாடு வெளிப்படுகின்றது. இடைக்காலக் கணக்கறிக்கை ஜனநாயக விரோதமானது என்கிறார் ரணில். ஜன நாயக ரீதியானது என்கிறார் சொக்ஸி. இப்போது வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றி வரப்போகும் அரசாங்கத்தை அதனால் கட்டிப்போடக் கூடாது என்ற சொக்ஸியின் வாதம் கட்சிக் கண்ணோட்டத்தைக் கொண்டது. அடுத்த அரசாங்கம் தங்களுடையது என்று கூறாமல் கூறுகின்றார். அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் என்ற அவசரத்தில் ரணில் தனது நிலை ப்பாடு அரசாங்கத்துக்குச் சாதகமான அர்த்தத்தைக் கொடுக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளவில்லை. இப்போதே வரவு செலவுத் திட்ட த்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறுவது, அடுத்த அரசாங்கமும் உங்க ளுடையதே என்பதால் வரவு செலவுத் திட்டத்தை இப்போதே நிறைவேற்றுங் கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றது.
0 commentaires :
Post a Comment