11/07/2009

அரபு லீக் தலைவருடன் ராகுல் காந்தி பேச்சுவார்த்தை


எகிப்துக்கு விஜயம் செய்த இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி எம். பி. அரபு லீக் தலைவர் அம்ர் மூஸாவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். 22 அரபு நாடுகள் அங்கம் வகிக்கும் அரபு லீக்கின் தலைவர் அம்ர் மூஸாவுடன் ராகுல்காந்தி எம்.பி. இந்திய, பாகிஸ்தான் பிரச்சினைகள் பற்றிப் பேசினார்.

தெற்காசிய நாடுகளில் நிலவும் பயங்கரவாதம், எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்களும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.

கெய்ரோ பல்கலைக்கழகத்துக்கு சென்ற ராகுல்காந்தி, அந்த நாட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், “தீவிரவாதத்தை எதிர்த்து அனைவரும் ஒன்று பட்டு போராட வேண்டும். அனைத்து நாடுகளின் வளர்ச்சியும், இளைஞர்களின் கையில் தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.




0 commentaires :

Post a Comment