11/05/2009

எவ்வித விசாரணையுமின்றி ஜெனரல் பொன்சேகா நாடு திரும்பினார்



பிரதான பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா நேற்று புதன்கிழமை காலை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ளார். இவர் நாடு திரும்புவதற்கு முன்னதாக அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு திணைக்களத்தினாலோ அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் ஏனைய முகவர் அமைப்புக்களினாலோ எவ்வித விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படவில்லையென வெளிவிவகார அமைச்சின் அதிகாரி நேற்றுத் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவை நேற்று 04 ஆம் திகதி ஒக்லாமா சிட்டியில் இடம்பெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டின் உள்துறை பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து அவருக்கு கடந்த மாத இறுதியளவில் எழுத்து மூலமான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஜெனரலை உள்துறை பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரியொருவர் தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டிருந்தார்.
இதற்கிடையில் பிரதான பாதுகாப்பதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா எவ்வித கேள்விகளுக்கும் உட்படுத்தப்படாமல் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இலங்கை அரசாங்கமும், ஜனாதிபதியும் பிரதான பாதுகாப்பு அதிகாரியின் சார்பாகவே எப்போதும் இயங்கும் என்பதில் முப்படைகளின் தளபதி என்ற வகையில் நாட்டின் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியுமான பாதுகாப்பு செயலாளர் மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஆகியோர் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளனர்
உயர் பதவியை பலவீனப்படுத்தவோ அதன் மதிப்பை குறைக்கச் செய்யவோ ஒருபோதும் இடமளிக்கமுடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதேவேளை இவ்விடயம் தொடர்பாக ரோஹித்த போகொல்லாகம கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.



0 commentaires :

Post a Comment